புதினங்களின் சங்கமம்

யாழ் தெல்லிப்பளை ஆமியின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து களவெடுக்கும் காட்சிகள் இதோ!!

தெல்லிப்பழை ஜே/240 தென்மயிலை கிராம சேவகர் பிரிவில் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளில் உடமைகள் இராணுவ ஒத்துழைப்புடன் களவாடப்படுகறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இப்பகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட போதும் குறித்த நிலப்பரப்பில் இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலைத்திருந்தனர்.
தற்போது பல அழுத்தங்களுக்கு மத்தியில் எதிர்வரும் மாதங்களில் இக்காணித்துண்டுகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினர் விலகுவதற்கான ஆயர்த்தங்களை மேற்கொள்கின்றனர். காணி உரிமையாளர்கள் உள்நுழைவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் பின்புறமாக வேலிகளை அறுத்து இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் உடமைகளை தனியார் திருடிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலரை தொடர்புகொண்ட போது தமக்கு எதுவும் தெரியாது, விடுவிப்பு தொடர்பில் எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என கைவிரிக்கின்றனர்.