புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொடூர பொலிஸ் அதிகாரியா? அரசி ஆலை காவாலி முதலாளிதான் காரணமா? மக்கள் மத்தியில் அச்சம்!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடமையேற்ற ஏ. நளின் தர்சனவிற்கு களுத்துறை மாவட்டத்திற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையம் இதுவரை காலமும் தனியார் வீடுகளில் இயங்கி வந்த நிலையில், தற்போது புதிதாக பொலிஸ் நிலையம் கட்டப்பட்டு புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழா எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இந்த புதிய பொலிஸ் நிலைய கட்டட பணிகளை துரித கெதியில் கட்டி முடிப்பதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நளின் தர்சன தீவிரமாக செயற்பட்டு வந்து நிலையில் , பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டவிருக்கும் நிலையில், குறித்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடமாற்றம் பெற்று சென்றிருந்த பிறடோஸ் நான்கு மாத கால பகுதிக்கு கூட முடியவடையாத நிலையில், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று , கோப்பாய் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்கவுள்ளார்.

முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த  பிறடோஸ் கொடூரமான செயற்பாடுகளையும் கடும்  லஞ்சம் வாங்கும் செயற்பாடுகளையும் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவரை அங்கிருந்து அகற்றினர். தண்டனை இடமாற்றம் பெற்ற குறித்த அதிகாரி தற்போது யாழிற்கு மீள வருவது பொதுமக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரியின் மீள் நியமனத்திற்கு சுன்னாகம், மருதனார்மடம். திருநெல்வேலி பகுதி சந்தைகளில் செயற்படும் மீற்றர்  வட்டி மாபியாக்களான ஜெகன் மற்றும்  ரைஸ் மில் முதலாளியே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x