நிறை வெறியில் “இந்த கடல் எங்கள் சொந்தக் கடல்” என பாட்டுபாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நையப்புடைத்த கடல்அட்டை பண்ணையாளர்கள்!!
யாழ்ப்பாணம் குருநகர், சிறுதீவு பகுதியில் மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் குழுவொன்று, அட்டைப் பண்ணையாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கொண்ட குழுவொன்று, குருநகர் சிறுதீவு பகுதிக்கு சென்று, மது அருந்தி, உல்லாசமாக பொழுதை போக்கியுள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில், கடலில் நீச்சலடிக்க முற்பட்டுள்ளனர்.
அங்கு அமைந்துள்ள அட்டைப்பண்ணைக்குள்ளால் நீச்சலடிக்க முற்பட்டுள்ளனர். அட்டைப் பண்ணைக்குள்ளால் நீச்சலடிக்க வேண்டாம் என பண்ணை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
போதையின் உச்சத்தில் “இந்தக்கடல் எங்கள் சொந்தக்கடல்“ வீரவசனம் பேசியபடி, அட்டை பண்ணைக்குள்ளால் நீச்சலடித்துள்ளனர்.
இதனால் இரு தரப்புக்குள்ளும் வாக்குவாதம் முற்றி, அடிதடியேற்பட்டது.
அட்டைப்பண்ணையாளர்கள் கூடி, போதையில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களை நையப்புடைத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 7 பல்கலைகழக மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்கலைகழக மாணவர்களின் தாக்குதலில் தாமும் காயமடைந்ததாக குறிப்பிட்டு அட்டைப்பண்ணை உரிமையாளரும், மற்றொரு பணியாளரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்தனர்.
