புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில்  மரத்தில் ஏறிய மாணவியை பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து ஏசிய பெண் அதிபர் பொலிசாரால் கைது!!

நெடுந்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணைகளின் பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜாம் பழம் பிடுங்குவதற்காக மரத்தில் ஏறிய மாணவி ஒருவரை பிரார்த்தனை நேரத்தில் மண்டபத்தில் வைத்து பிள்ளைகளுக்கு மத்தியில் ஏசியுள்ளார். அத்துடன் மாணவியின் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பாடசாலை பெண் அதிபர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.