புதினங்களின் சங்கமம்

பளையில் சிறந்த மாணவனான ஜதுர்சியன் வாகனத்தால் திட்டமிட்டு இடித்துக் கொல்லப்பட்டாரா? (வீடியோ, போட்டோ)

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவத்தில் இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த ராஐபாஸ்கரன் ஐதுர்சிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பி சென்றுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஐபாஸ்கரன் ஐதுர்சிகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று சிறந்த மாணவனாக இருந்தார். குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வளவு வேகமாக வாகனங்களைச் செலுத்தி அப்பாவிகளை கொல்பவர்கள் போதைப் பொருள் பாவித்துவிட்டு வாகனம் ஓட்டும் காவாலிகளாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் சிறையில் இருந்து வெளியே வராத நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

May be an image of 1 person and textMay be an image of 2 people and text that says "பாராட்டி வாழ்த்துகின்றோம் கிளி/ பளை இந்து ஆரம்ப வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சை- சை 2021 வாழ்த்துபவர் துபவர் கள்- பாடசாலைச் சமூகத்தினர் கிளி/பளை இந்து ஆரம்ப வித்தியாலயம் புள்ளி - 178 இ.யதுர்சிகன்"May be an image of 1 person, smiling, wingtip shoes and text that says "28 minutes ago Miss you so much ^ Reply"May be an image of 1 person and hospitalMay be an image of bicycleMay be an image of 1 person and hospital