சல்லிக்கற்கள் ஏற்றிவருவதைப்போன்று மரக்குற்றிகளுக்கு மேலே சல்லிக்கற்களை போட்டு மிகவும் சூட்சுமமான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறுமதியான 18 காட்டுத்தேக்கு மரக் குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை 07/06 சனிக்கிழமை மதியம் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலிதசெனவிரத்னவின் வழிகாட்டலில் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு சாவகச்சேரிப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home புதினங்களின் சங்கமம் சாவகச்சேரியில் சல்லிக் கற்களுக்குள் கில்லாடிகள் தேக்குமரம் கடத்தியது எப்படி? வீடியோ





