புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் மாமியை சுவிஸ் அழைத்து 7 கோடி ரூபா பெறுமதியான வீட்டை ஆட்டையைப் போட்ட மருமகன்!! யாழில் தாயும் மகளும் தற்கொலை முயற்சி!!

யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாருக்கு நடந்த கதியை இங்கு தந்துள்ளோம். குறித்த தாயாரின் 34 வயதான மூத்த மகள் 14 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்து சுவிஸ்லாந் சென்று வாழ்ந்து வருகின்றார். மற்றைய மகள் பல்கலைக்கழக பட்டதாரியாவார். அத்துடன் அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்ளதுடன் திருமணம் முடிக்காது தாயுடன் வசித்து வருகின்றார்.

மூத்த மகள் காதலித்து திருமணம் முடித்ததால் நீண்டகாலம் மகளுடன் தொடர்பில் இல்லாதிருந்த தாயார் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மகள் யாழ்ப்பாணம் வந்த போது மகளது பிள்ளைகளினால் தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சுவிஸ்லாந் வருமாறு மனைவியின் தாயாரை சுவிஸ்லாந் அழைத்து மனைவியின் தாயாரின் வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார் மருமகன்.

சுவிஸ்லாந்திற்கு செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சொத்து மதிப்பினை சுவிஸ்துாதரகத்திற்கு காட்டுவதற்காக மாமியார் தனக்கு சொந்தமான வீட்டை பெறுமதியிட்டு குறித்த துாதரத்திற்கு விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் சுவிஸ்லாந்திற்கு தனது மகளின் அழைப்பில் சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த போது மாமியாரை சுவிஸ்லாந்தில் நிரந்தரமாக தங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக மருமகன் மாமியாருக்கு ஆசையூட்டியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றைய மகளையும் சுவிஸ் அழைக்கலாம் எனவும் கூறியுள்ளார். அதன் காரணமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக கூறி மாமியாரை குறித்த விசா முடிவடைவதற்குள் கொழும்பு கொண்டு வந்து ஆங்கிலத்தில் உறுதி ஒன்றைத் தயாரித்து மாமியாரின் யாழ் நாவலர் வீதியில் உள்ள 3 பரப்பு காணியுடன் கூடிய வீட்டினை தனக்கும் மனைவிக்குமாக சீதனமாக அறுதி உறுதி என எழுதி மாமியாரிடம் கையெழுது்தும் வாங்கி காணிதிணைக்களத்தில் பதிவு செய்துள்ளார். குறித்த வீட்டை சுவிஸ் மருமகனுக்கும் மகளுக்கும் சொந்தமாக எழுதியதை அறியாத அப்பாவி மாமியார், நிரந்தரமாக சுவிஸ்லாந்தில் தன்னை மருமகன் தங்க வைப்பதற்கான ஆயத்தங்களை செய்வதற்கே சிங்கள சட்டத்தரணி முன்னிலையில் தன்னிடம் கையெழுத்து வாங்குகின்றார் என எண்ணியுள்ளார். வீட்டை தனது தாயிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய விடயம் சுவிஸ்லாந்தில் உள்ள மனைவிக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள மகளுக்கோ தெரியாது.

சுவிஸ்லாந்திலிருந்து மருமகனுடன் வந்த மாமியார் காணியை எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் இரு நாட்களில் மருமகனுடன் சுவிஸ் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த பின் விசா முடிவடையும் காலம் வரும் போது மருமகள் மாமியாரிடம் சுற்றுலா விசா முடிவடைந்து விடுவதற்குள் இலங்கை செல்லுமாறும் அங்கு சென்ற பின்னரே நிரந்தர விசா எடுக்கலாம் என கூறி மாமியாரை இலங்கை அனுப்பியுள்ளார்.

மாமியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து ஓரிரு மாதங்களின் பின்னரே தனது சுவிஸ் மாப்பிளை தன்னை ஏமாற்றிய விடயம் சுவிஸ் மகள் ஊடாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள தாயார் தனது மகளுக்கு முன்னால் தானும் யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றைய மகளும் துாக்கில் தொங்கி இறக்க போவதாக கூறியுள்ளார். இதனால் கடும் அச்சமடைந்த சுவிஸ் மகள் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தாயாரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் குறித்த வீட்டை தனது கணவரிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தனது கணவர் அவ்வாறு கையெழுத்திடாவிட்டால் தான் அவரை விவாகரத்து செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை தாயார் சுவிஸ் செல்வதற்காக தனது வங்கியில் உள்ள வைப்பு தொடர்பான ஆவணங்களை சுவிஸ் துாதரகத்திடம் கையளித்த போது தாயாரின் பெயரில் 12 மில்லியன் ரூபா பணம் 3 வங்கிகளில் நீண்ட நாள் வைப்பாக இருந்துள்ளதையும் தாயாருக்கு ஏ9 வீதியோரத்திலும் 4 பரப்பு காணி உள்ளதாக காட்டப்பட்டிருப்பதையும் சுவிசில் உள்ள மருமகள் தனது மனைவிக்கு கூறி தனக்கு ஏன் சீதனம் தரக்கூடாது என கேட்டதாகவும் தெரியவருகின்றது.

”லவ் பண்ணி கலியாணம் கட்டியதால் என்னை ஏமாளி என்று ்உன்ர கோத்தை் நினைக்கிறாவோ” என மருமகன் சுவிசில் உள்ள மனைவியுடன் சண்டை பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.