புதினங்களின் சங்கமம்

கொழும்பு முருகன் கோவிலில் சங்கிலி அறுத்த கிளிநொச்சி யுவதிக்கு நடந்த கதி!

கொழும்பு கொம்பனி வீதி, கியூ வீதியிலுள்ள முருகன் கோயில் திருவிழாவில் பக்தர்களின் தங்கச்சங்கிலி அறுத்த கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

மொரட்டுவை சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்ணொருவர் அறுத்துள்ளார்.

ரூ.600,000 பெறுமதியான தங்கச்சங்கிலியே அறுக்கப்பட்டது.

பொலிசார் அந்தப் பெண்ணை கைது செய்தபோது, நகையை அந்த பெண் தூக்கி எறிந்துள்ளார். பின்னர் கோயில் வளாகத்தில் நகை கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

விசேடமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்காக இவருடன் வேறு ஒரு குழு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.