புதினங்களின் சங்கமம்

யாழ்.கொழும்புத்துறையில் ஐஸ் போதை பொருளுடன் நாச்சிகுடா வாசி கைது!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நபர் ஐஸ் போதை பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நாச்சிகுடா பகுதியை சேர்ந்த 31 வயதான நபரே யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 200 கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.