புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ்க் கடையில் யாழ்ப்பாண மாம்பழம் வாங்கியவருக்கு நடந்த கதி இது!! (Photos)

சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

விற்பவர்கள் மீது பிழையா..? அல்லது
அவற்றை வாங்குவோர் மீது பிழையா?
இதை விற்பவர்கள் அவை உன்பற்கு உகந்தவை அல்ல என தெரிந்துகொண்டே வேண்டுமென்றே விற்கிறார்கள்.
ஆனால் பாவம் வாங்குபவர்கள் நம்பிக்கையில் ஒரு மாம்பழப் பெட்டியை தூக்கிச் செல்கிறார்கள்..
இன்று sp importers கடையில் கொளவனவு செய்யப்பட இந்த மாம்பழங்களை மதிய உணவின் பின்னர் உண்பதற்காக ஒன்றை எடுத்து வெட்டினேன்.. அழுகியிருந்தது.. சரி பரவாயில்லை வழமையாக ஒன்று அல்லது இரண்டு
பழங்கள் ஒரு பெட்டி பழங்களுள் பழுதடைந்து திறனற்று இருப்பது அல்லது கலந்து வைப்பது அனைத்து கடைகளிலும் வியாபார சுத்துமாத்து வழமைதானே என எண்ணியவாறு அடுத்தடுத்து 5 பழங்களை வெட்டினேன். அனைத்தும் உண்ண தகுதியற்றவை அதிர்ச்சியும் ஏமாற்றமும். மன உழைச்சலும் அடைந்தேன். மதிய நேரம் வாங்கிவந்தது எனது மாமியார் – வயசு 70, 9 பழங்களும் சலோ டேப் போட்டு வாங்குவோர் தொட்டுனர முடியாதவாறு அந்த விலாட்டு ரக மாம்பழ பெட்டிகள் ஓடிடப்பட்டிருந்தன. விலை 14 cdn. சற்று மன குழப்பத்தோடு தெரிந்த தமிழ்க்கடைக்காரர் தானே நேரில் சென்று முதலாளிக்கு விடயத்தை காண்பித்து அறிவுறுத்தி காட்டிவிட்டு வேறொன்றை மாற்றிவருவோம் எனச்சென்று அந்த முதலாளியாரை மெதுவாக நட்புடன் அணுகி அண்ணா சின்ன அலுவல் ஆனால் முக்கியமானது என்று கூறி கதைக்கவேணும் என்று மக்கள் இல்லாத ஓரமாக அழைத்தேன்.. கரும்பு இளநீர் வியாபாரம் படு பிசியாக இருந்ததால். 10 நிமிடங்கள் காத்திருந்து. 5 கஷ்டமர்களை அனுப்பிவிட்டு very Busy என்று கூறிக்கொன்னு சற்று சினந்தவாறு வந்தார். ஓரமாக கூட்டிச்சென்று இவற்றை காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன். அவருக்கு சங்கடம் போலும். முகத்தில் அடித்தாப்போல சொன்னார்.. சரி.. நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என்றார். அவரது அழுத்தமான பதில் ஏதோ
நுகர்வோர் மீதே தவறுப்போல இருந்தது. அது உண்மைதான் அண்னே . நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன்.. அவரிடம் நான் எதிர்பார்த்தது நட்புடன் கூடிய சில ஆறுதல் பதில்களை. ஆனால் அந்த ஆறுதல் வார்த்தைகள் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம்.. வேறொன்றை எடுத்து செல்லுங்கள் அல்லது பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியவாறே உதாசீனமாக கூறிக்கொண்டு அப்படியே உள்ளே சென்றுவிட்டார். முன் கடை விற்பனையில் பெண்மணி ஒருவர் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டு நின்றார் அவரது காத்துக்கும் நாம் கதைத்தது கெடைபிருக்கும். தரையில் கொட்டு ண்டு புரண்டு ஓடிய சில மங்குஸ்தான் பழங்களையும் கூச்சமின்றி மக்கள் பார்க்கிறார்களே என்ற சலனம் ஏதுமின்றி எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தார். அந்த இடம் ஒரு நடைபாதை. அவரை அணுகி மாம்பழப் பெட்டி வேறொன்றை மாற்ற கேட்டபோது. அந்த பெண்மணி பாராமுகமாக போனில் கதைத்துக்கொண்டும் மற்றய கஸ்ட்மர்க்ளுக்கு விற்பனை செய்வதிலுமே கவனமாக இருந்தார். போன் கதைக்கிறேன் தெரியவில்லையா? என்றார். அவரது குரல் உயர்வும் பாரா முக்கமும் அந்த மாம்பழங்களை திரும்பவும் நாம் கொண்டுசென்று காட்டியது அவர்கள் ஒருவருக்குமே பிடிக்கவில்லை என்பது எனக்கு புரிந்தது. நசனாக்கவே சென்று ஒன்றை மாற்றுவதற்க்காக உள்ளே சென்று அதே இன மாம்பழ பெட்டிகளை பார்த்தபோது. அனைத்துமே தரமற்றவையாக கருத்து அழுகியிருந்தது. மீண்டும் அந்த பெண்ணிடம் அதை குறிப்பிட்டு கூறியபோது. அவர் சினப்புடன் சொன்னார் அப்ப.. என்ன… அவற்றை எல்லாம் எறியவா சொல்கிறீர்கள் என்று. ஆகா அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன?
இதுதான் நமது வியாப்பாரம் என்றாரா? எனக்கு புரியவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன். கேவலம் தமிளர்களது கடைகளை விட சீனா காரண்டை கடை துப்பரவிலும் தூய்மையிலும் நேர்மையிலும் விலையிலும் பரவாயில்லை என்று மக்கள் கதைப்பது உண்மைதானே என்ன உறுத்தியது . 14 டொலர் பெறுமதியான 9 மாம்பழத்துக்கு இந்த பக்கம் ஏன் வந்தேன் என்று நினைத்தேன். தமிழன் என்ற உணர்வு.. தமிழ் தேசியம் என்ற உணர்வு.. இதெல்லாம் இனிவரும் காலங்களில் உணர்வு அல்ல எமது பலவீனம் என்பதை உணர்ந்தேன். இவர்களுக்கு உபதேசம் செய்து மாம்பழ பெட்டியை மாற்ற வந்ததைவிட 5 நிமிடங்கள் செலவழித்து இந்த படங்களை சுகாதாரத்துறையினருக்கு மெயிலில் அனுப்பிவிட்டு உடனே இந்தக்கடைக்கு இன்றே வந்து பரிசோதனை செய்யுங்கள்.. பொதுமக்கள் சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்.. உணவுத்தரத்தை உறுதிசெய்யுங்கள்.. இதை எனது முறைப்பாடாக பதிவிடுங்கள் என்று ஒரு அழுத்தம் திருத்தமாக ஒரு போடு போட்டிருந்தால். சிலமணிநேரத்தில் அவர்கள் அங்கே வந்து அனைத்துமே திருத்தப்பட்டிருக்கும். நமக்குத்தான் இந்த தமிழ் இன உணர்வு விடாதே..!! தமிழ் கடைக்காரர்களே சிந்தியுங்கள். உங்களிடம் நியாய விலை இல்லாது போலானாலும் நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து உங்களை நாடிவரும் மக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்ய முயர்ச்சி செய்யுங்கள். மாம்பழம் வாங்கும் மக்களே நல்ல பழங்களை பார்த்து உறுதி செய்து எடுத்து செல்லுங்கள்.
மாம்பழ பெட்டிகளை காற்றோட்டம் படும் படியாக வைக்க அந்த கடைக்காரர்கள் பழகவேண்டும்.
பழங்களை பாதுகாக்கவும் தரத்துடன் பேணி விற்கவும் தனியான கற்கை முறைகள் உண்டு இவர்களுக்கு அது தெரிந்திருக்குமோ என்னவோ..
என்ன செய்ய நம்ம தமிழ் கடை காரர்கள் ஆச்சே…
வாடிக்கையாளர்களை மதியுங்கள்.
அவர்களது கருத்துக்களை குறைகளை நிறைகளை ஒரு கணம் கேட்டு மறு பரிசீலனை செய்யுங்கள்..
“சரி பார்த்து வாங்குங்கோ” என்பதை விட.. நீங்கள் சரிபார்த்து தரத்துடன் சிறப்புடன் விற்பதே நியாயமான விற்பனை. விற்பனை துறைக்கு அதுவே அழகு.
Health and safety Act.. Regulations by government law.
very importan to all bussiness place..!

May be an image of fruit and prickly pear

நமது தமிழர்களது உணவு கடைகளும் சரி மரக்கறி மாமிச கடைகளிலும் சரி ஏனைய சமூகத்தினர் கடைகளோடு ஒப்பிடும்போது கவனக்குறைவும் துப்புரவு குறைவும் தராதர குறைவும் காணப்படுகிறது என்பது உண்மைதான். காலை வேளைகளில் கடைகளை திறக்கும் போது மக்கள் கொள்வனவுக்கு வரும் முதல் மரக்கறி பழங்களை சரிபார்த்து அடுக்கி வைக்கும் பழக்கம் நமது தமிழ் கடைக்காரர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. சீனர்களது கடைகளில் அதற்கென இருவர் அமர்த்தப்பட்டு இருப்பார்கள் கூடிய கவனத்தோடு நல்லது கெட்டவைகளை தெரிவு செய்து கொண்டே இருப்பார்கள்.

May be an image of fruit

அதென்னய்யா வெள்ளக்காரன் கருப்பன ஏளனமா பாத்தா racism எண்டுறது நீங்க மட்டும் தமிழன் தமிழன் எண்டுறது. நீங்களும் ஒரு விதத்தில racist தான், உரிமைக்கான போராட்டம் இப்ப திரிபடைந்து இனவாத போராட்டமாக அறிந்தோ அறியமலோ ஊடுருவி விட்டது. இனி மாற்றுவது கடின், எங்கட ஆக்கள் எண்டு பாக்காம நீங்க நினைச்ச மாதிரி சுகதாரத்துறையை அணுகி இருந்தால் வரிசையில் உங்களுக்கு பின்னால் நின்றவர்களாவது நன்மை அடைந்திருப்பார்கள்.

May be an image of coconut macaroon, fruit and text