இன்றைய இராசிபலன்கள் (24.06.2023)
மேஷம்
இன்று அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பெறுவீர்கள். சிறப்பான தொழில் அபிவிருத்தியும், பொருளாதார மேன்மையும் அடைவீர்கள். தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ராசி பலன்கள்
ரிஷபம்
இன்று தொழிலில் சிறந்து விளங்கும். பொருளாதாரம் எதிர்பார்த்த வகைகளிலிருந்து கைக்கு வந்து சேரும். நற்செயல்களால் புகழ் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சில சமயம் தனக்குத்தானே எதிரி என்ற நிலையில் உங்களது செயல்கள் நிதானமின்றி நடந்து விடும். கணவன் மனைவி இருவரது உறவு சார்ந்த முறையில் நன்னிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்
மிதுனம்
இன்று உடல் பலம் பெறும். தந்தை வழி சார்ந்த இனங்களில் அனுகூல குறைவு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் நிறையவே வந்து சேரும். ஆதாயங்கள் சேமிக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாகும். குலதெய்வ வழிபாடுகளில் நிறைவேறாத நேர்த்திகடன் நேர்ந்து கொண்டபடி நிறைவேற்றும் வழிவகைகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
ராசி பலன்கள்
கடகம்
இன்று உயர் அதிகாரிகள் தகுந்த கவனம் செலுத்தி உற்பத்தியை பெருக்குவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் துறை சார்ந்தவர்களிடம் நற்பெயர் பெறுவார்கள். பொருளாதார வரவுகள் தேவைக்கு தகுந்தாற்போலவும் சிரமம் இல்லாது கிடைக்கும். தனியார் துறையில் உள்ளவர்கள் வருமானம் கூடப்பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
ராசி பலன்கள்
சிம்மம்
இன்று சிற்றின்ப விஷயங்களில் மனம் அலைக்கழிக்கப்பட்டு பின்பு தெய்வ அருளால் நல்ல நிலைமை உருவாகும். புத்திரர்களால் சில இடையூறுகள் வந்து விலகும். எதிரித்தனத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. உத்தியோகம் சார்ந்த வெளியூர் பயணங்கள் உயர்வைத்தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
ராசி பலன்கள்
கன்னி
இன்று தொழிலி முன்னேற்றம் காணப்படும். தொழிலில் ஏற்படும் போட்டிகளாலும் பொறாமைகளாலும் சில சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதால் நிதானமாக செயல்பட்டு வருவது நல்லது. புதிய பணியாளர்களை நியமனம் செய்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
ராசி பலன்கள்
துலாம்
இன்று மனம் தைரியமாகவும், செயல்கள் உற்சாகமாகவும், நண்பர்களின் உதவியும் நிறையவே உண்டாகும். நோயற்ற வாழ்க்கையும், குடும்பத்தில் ஒற்றுமையும் திகழும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்
விருச்சிகம்
இன்று வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்னும் மூலதனத்தை பெருக்கி முன்னேற்றம் காண்பார்கள். தொழில் சார்ந்த பாதுகாப்புக்காக சங்கம் போன்றவை வைத்து செயல்படும் வழிவகைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கைகளும், சமூகத்தில் தேவையான அந்தஸ்தும், தைரியமாக செயல்பாடுகளும் நல்ல பெயரை உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
ராசி பலன்கள்
தனுசு
இன்று வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தினை தகுந்த இடங்களில் முதலீடு செய்து எதிர்கால வாழ்விற்கு பாதுகாப்பு தேடிக் கொள்வார்கள். எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் விதத்தை, சமூக சூழ்நிலைகளை உணர்ந்து திட்டமிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்
மகரம்
இன்று உறவினர்களால் மதிக்கப்பெறும் நன்னிலை உருவாகும். ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். புதிய வகை வாகன வாய்ப்புகள் உண்டாகும். ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பலம் தருவதாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் இலக்கை திறம்பட செய்து சிறப்பு பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ராசி பலன்கள்
கும்பம்
இன்று பணியிலுள்ளவர்கள் புதிய சலுகை பெறும் வகையில் பணியை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள். சம்பள உயர்வு பெறுவர். தொழில்நுட்ப கல்வி பயின்று புதிதாக பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்
மீனம்
இன்று சிறு தொழில் நடத்துவோர் நல்ல வருமானம் பெறுவர். திருமண வயதை அடைந்தவர்கள் குருவின் அருளால் திருமணம் நடக்கும் வாய்ப்பு பெறுவார்கள். தெய்வ வழிபாடுகளும், உறவுமுறை சார்ந்த பெண்களால் புதிய நட்புகளும் உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5