புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஈழத் தமிழர் ஈசியாக லண்டன், கனடாவுக்கு விசா எடுக்கலாம்? லண்டன் டொக்டர் சிவச்சந்திரன் சொல்வது என்ன?

இந்தப் பதிவு லண்டனில் வசித்துவரும் இலங்கைதை் தமிழரான சிவச்சந்திரன் எனும் வைத்தியரது முகப்புத்தகத்தில் வெளியாகிய பதிவாகும். அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்….

தமிழர்கள் ஈசியா கனடாவுக்கு விசா எடுக்கலாம். உங்கட சொந்த காரங்க விரும்பினா உங்களை ஈசியா இங்கிலாந்துக்கு அழைக்கலாம் என்ற ரீதியில் நிறைய போஸ்ட்கள் உலவுகின்றன.
இந்த நாடுகளின் விசா நடைமுறைகளை அறைகுரையாய் புரிந்துகொண்டு சிலர் அடிச்சுவிட , நம்மட சனமும் பாவம் அவற்றை நம்பி ஏமாந்து பகிர்ந்து தள்ளுகிறார்கள்.
இவை உண்மையா?
கனடாவுக்கு ஈசியா விசிட் விசாவில் போய், செட்டில் ஆகலாம் என ஒரு போஸ்ட் உலவுகிறது. இதில் இருக்கும் உண்மை தன்மை என்ன?
விசிட் விசா என்பது சுற்றுலா விசா. அதாவது நீங்கள் ஒரு நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கான அனுமதி. அந்த விசா கிடைத்தால் நீங்கள் ஆகக்கூடியது ஆறு மாதமே அந்த நாட்டில் இருக்கலாம். அதன்பிறகு பெட்டி கட்டிக் கொண்டு சொந்த நாட்டுக்கு திரும்பிட வேண்டும்.
அந்த சுற்றுலா விசாவில் சென்றால் நீங்கள் ஊரைச் சுற்றி பார்க்கலாம். ஆனால் வேலை செய்ய முடியாது.
சரி நீங்கள் சுற்றுலா விசாவில் ஒரு நாட்டுக்கு செல்கிறீர்கள். அங்கே உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பி, உங்களுக்கு வேலை கிடைத்ததை சொல்லி புதிதாக வேலை செய்வதற்குரிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதான் வழமையான நடைமுறை.
இப்போது கனடா அந்த நடைமுறையை கொஞ்சம் மாற்றி, நீங்கள் சுற்றுலா விசாவில் வந்து இருக்கும்போது , உங்களுக்கு கனடாவில் ஒரு வேலை கிடைத்தால் நீங்கள் சொந்த நாட்டுக்கு போகாமல் கனடாவில் இருந்தபடியே உங்கள் விசாவை மாத்தி வேலையை ஆரம்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
வழமைபோல் அந்த அறிவிப்பை அறைகுறையாக புரிந்துகொண்ட பலர் , ஈழத்தமிழர்களே ஈசியா விசிட் விசாக்கு அப்ளை பண்ணி கனடாவில் செட்டில் ஆகுங்க என அடிச்சு விட பாவம் நமது சனமும் அதை நம்பி கனவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் தெளிவாக இதை சொல்கிறேன்,
கனடாவுக்கு சுற்றுலா/விசிட் விசாவில் போகிறீர்கள். அங்கே போனதும் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. நீங்கள் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றால் மீண்டும் இலங்கை போய் புதிய விசாவுக்கு அப்ளை பண்ணி, கனடாவுக்கு திரும்ப போய் வேலை செய்ய வேண்டும். இதுதான் இதுவரை இருந்த நடைமுறை.
இப்போது நீங்கள் கனடாவுக்கு சுற்றுலா / விசிட் விசாவில் சென்றிருக்கும் போது வேலை கிடைத்தால், நாட்டுக்கு திரும்பாமல் அங்கே இருந்தபடியே புதிய விசாவுக்கு அப்ளை பண்ணி வேலையை ஆரம்பிக்கலாம்.
இந்த சின்ன விசா நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி போல கனடாவில் குடியேறுவது இலகுவாக்கப்படவில்லை.
நிறையப்பேர், நாங்க கனடாவுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கே என்ன வேலை கிடைத்தாலும் செஞ்சு செட்டில் ஆகிடுவோம் என நினைக்கலாம்.
அது நீங்கள் நினைப்பது போல் அல்ல…
என்ன வேலை கிடைத்தாலும் உங்களுக்கு அங்கே விசா கிடைக்காது.
உங்களுக்கு வேலை தருபவர்கள் அரசாங்கத்துக்கு பணம் கட்டி உங்களை ஸ்பொன்சர் பண்ண வேண்டும். அவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை தரவேண்டும். சின்ன சின்ன வியாபார தளங்களோ , கம்பெனிகளோ அப்படியான வேலைகளை வழங்காது.
பெரிய வியாபார தளங்கள் அப்படியான வேலைகளை வழங்கும். ஆனால் அவை ஒரு வேலைக்கு தகுதியும்,, அனுபவமும் உள்ள நபர்கள் கனடாவில் கிடைக்காத போது மட்டுமே அவ்வாறான வேலைக்கு வெளிநாட்டவர்களை ஸ்பொன்சர் பண்ணி எடுக்கும். இதே நடைமுறை கனடாவில் மட்டுமல்ல , இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ளன.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால், நீங்கள் கனடாவுக்கோ, இங்கிலாந்திற்கோ வேலை பெற்று செல்வதென்றால் அந்த நாடுகளுக்கு விசிட் விசாவில் போய்தான் வேலை எடுக்க வேண்டும் என்பதில்லை.
தகுதி இருப்பவர்கள் இலங்கையில் இருந்தபடியே வேலைக்கு அப்ளை பண்ணி , நேரடியாக வேலை விசாவுடனேயே அங்கே போய் இறங்கலாம்.
பேஸ்புக்கில் பரவும் எல்லோரும் ஈசியா கனடாவில் போய் செட்டில் ஆகலாம் என்ற செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள்.
அந்த செய்திகளால் யாரோ சில இடைத்தரகர்கள்தான் சம்பாதிப்பார்கள். நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள்.