புதினங்களின் சங்கமம்

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமான தாக்குதல்! தகவல் மூடிமறைப்பு…

யாழ்.சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

தலையிலும் முகத்திலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாடசாலை அதிபரின் தலையீட்டால் வைத்தியசாலை நிர்வாகத்தின் துணையுடன் குறித்த மாணவனை வெள்ளிக்கிழமை மாலையே

வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாது குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாவச்சேரி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் பாடசாலையில் தாக்கப்பட்டதை உறுதி செய்தார்.