யாழ்.நகருக்கு அண்மையில் கத்திக்குத்து தாக்குதல்! ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் நகருக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

