புதினங்களின் சங்கமம்

நெல்லியடியில் வீடு உடைத்து கொள்ளையடித்த 24 வயது குடும்பப் பெண்!! நடந்தது என்ன?

நெல்லியடியில் 6.5 வுண் நகைகள்திருடிய இரண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம் (16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது.

ஒரே வளவுக்குள் உள்ள இரண்டு வீடுகளில் இரண்டு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அதில் வீடொன்றில் தனித்திருந்த பெண்ணொருவர், சமையல் வேலைக்கு சென்ற பின்னர் நகைகள் களவாடப்பட்டிருந்தன.

நேற்று காலை வேலைக்காக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாலை 4:30 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய கே.விமலவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் சந்தேகநபரை கைது செய்து , நகைகளையும் மீட்டுள்ளனர்.

அதேவளவுக்குள் மற்றொரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 2 பிள்ளைகளின் தாயான 24 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டார்.

தனியார் நிதிநிறுவனத்தில் மூன்றே முக்கால் பவுண் தாலிக்கொடி அடைவு வைத்து 3 இலட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். மிகுதி இரண்டே முக்கால் பவுண் நகைகளை வீட்டின் பூச்சாடியின் கீழ் வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் மற்றும் மீட்க்கப்பட்ட நகைகள் என்பன இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.