புதினங்களின் சங்கமம்

யாழில் சூப்பர் மார்க்கெட்டை உடைத்து கைவரிசை..! பணம், குளிர்பான வகைகள் திருட்டு! Photos

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.தென்மராட்சி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கூரை வழியாக சூப்பர் மார்க்கெட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணம்,பால்மா பைக்கற்கள் மற்றும் குளிர்பான வகைகளை திருடிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் திருட்டுக் காட்சி அங்கிருந்த பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ள நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

May be an image of 1 person