புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

16 வயது தமிழ் சிறுமிகளுக்கு குஞ்சுமணி பூசை செய்ததாலே லண்டன் சரவணபாவா கைது!! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.

கடந்த இரண்டரை நாட்களாக அவர் மீது கால்துறையினர் மேற்கொண்ட கடுமையான விசாரணைகளைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் அவரது வழக்கு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ‘பாலியல் முறைகேட்டு’ குற்றச்சாட்டுக்களே முரளிகிருஷ்ண சுவாமிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது” என தெரியவந்துள்ளது.

16 வயது பெண் மீது பாலியல் வன்முறை புரிந்துள்ளதான (Rape) ஒரு குற்றச்சாட்டும், 16 வயது பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியிலான தாக்குதலை மேற்கொண்டார் (sexual Assault) என்கின்றதான மற்றொரு குற்றச்சாட்டும், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் (attempt to rape) என்கின்ற மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற இணையத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியச் சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடமுடியாது என்றும் நீதிமன்ற இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை கடவுள் என்று கூறிவருகின்ற கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இந்தச் சாமியார் மீது அண்மைக்காலமாக பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக குறிப்பிட்ட அந்தச் சாமியார் தொடர்பான ஆபாச காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வந்ததுடன், பல பெண்களுக்கு அவர் அசிங்கமான செய்கைகளை வெளிப்படுத்துவதான காணொளிகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முடிவரவு குடியகல்வு மீறல்கள் உட்பட வேறு பல குற்றச்சாட்டுக்களும் குறிப்பிட்ட இந்த முரளிக்கிருஷ்ணா மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், அது பற்றிய விசாரணைகள் அடுத்த வருகின்ற நாட்களில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை, குறிப்பிட்ட இந்த சாமியாரினால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது ஈழத்தமிழர்கள் இருந்தால், அவர்கள் காவல்துறையினரிடம் முன்வந்து சாட்சிபகரவேண்டும் என்று புலம்பெயர் சட்டத்தரணி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

May be an image of text that says "CourtServe years Court Services Home My Account Buy Services Contact Open list About Us Service Range Compare Services new tab FAQ Professional Services 09 Section 18- wounding mitert weapon Publish 10:00 CourtServe 2000 CourtServe HRA CourtServe County public place on June 2023 01SX1185023 -mail Services Crown Express County Express RC) Express Employment Tribunal Express Page 1o) CPS-LN Farst hearng over MURALIKRISHNAN, Pulikkal Sexual assauft on female Rape woman 16 yoars of age SOA 2003 Attempt rape SOA 2003 Complainant's anonymity protected virtue Section the Sexual Offences Amendment Act 1992 woman 16 OVET"