புதினங்களின் சங்கமம்

கொழும்பில் விக்னேஸ்வரனை வலை வீசித் தேடும் பொலிசார்!! மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்!!

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 13, ஜம்படா வீதியை சேர்ந்த புஷ்பராஜ் விக்னேஸ்வரன் (27 வயது) நபரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அவர் தொழில் ரீதியாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் எனவும், வலது கையின் முழங்கைக்கு கீழே யானை முகம் ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733
பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335
பொறுப்பதிகாரி விசாரணைப் பிரிவு – 071 8596503