யாழ்ப்பாண இஞ்சினியர் மாப்பிளையின் குஞ்சுமணி விலை ஒரு கோடியாம்!! எழுத்து முடிந்தது,கலியாணம் குழம்பும் நிலை!!
யாழ் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாப்பிளையின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் ஒரு கோடி ரூபா சீதனம் கேட்டதால் பதிவுத்திருமணம் முடிந்தும் கலியாணம் நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியலாளரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் காசாக ஒரு கோடி ரூபா சீதனம் கேட்டுள்ளார்கள். இந்த பணத்தில் பதிவுத்திருமணம் நடந்த அன்று பெண் வீட்டார் 40 லட்சம் ரூபா கொடுத்துள்ளார்கள். அத்துடன் மாப்பிளைக்கு நெல்லியடிப் பகுதியில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வீடு ஒன்றும் சீதனமாகக கொடுக்கபட்டது. அதை விட வரணிப்பகுதியில் 15 பரப்பு காணியும் மாப்பிளையின் பெயரில் எழுதியுள்ளார்கள். 31 வயதான பொறியியலாளரான மாப்பிளை கொழும்பில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கின்றார்.பெண்ணும் விஞ்ஞானப்பட்டதாரி ஆவார். இன்னும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை எனத் தெரியவருகின்றது. பெண்ணுக்கு இரு சகோதரிகள் உள்ளார்கள். இருவரும் வெளிநாட்டில். இந் நிலையில் இம் மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த மகளின் கலியாணவீட்டுக்காக பெண்ணின் பெற்றோர் மகளுக்கான நகைகளை கொள்வனவு செய்திருந்தனர். இதனால் கலியாண வீட்டுக்கு முதல் மாப்பிளை வீட்டாருக்கு கொடுக்க வேண்டிய 60 லட்சம் ரூபா பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் பெண்ணின் பெற்றோர் தமது வெளிநாட்டு மகளின் பெயரில் இருந்த காணியில் 4 பரப்பை காசுக்குப் பதிலாக மாப்பிளை வீட்டாரிடம் ஈடு கொடுக்க முற்பட்டனர். கலியாண வீடு முடிந்து ஒரு சில மாதங்களில் காசைக் கொடுத்து காணியை மீட்போம் என பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளார்கள். இருந்தும் மாப்பிளை வீட்டார் அதற்கு சம்மதிக்காது பணத்தைப் பெறுவதிலேயே குறியாய் இருந்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் வெளிநாட்டில் உள்ள மணப்பெண்ணின் தமக்கையின் கணவர் மாப்பிளை வீட்டாருடன் 60 லட்சம் ரூபா காசுக்கு தான் பொறுப்பு என கூறி கதைக்க முற்பட்ட போது வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக பதிவுத்திருமணம் செய்திருந்த தனது மனைவிக்கு இஞ்சினியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாகரத்துக்கு ஆயத்தமாகுமாறு கூறினாராம். அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் நடைபெறுவதற்கு இருந்த திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சிட்டு முடிவடைந்து பலருக்கு விநியோகித்த பின்னர் திருமணத்தை நிறுத்திவிட்டாராம் மாப்பிளை.
மாப்பிளையின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் அடங்கிய தகவல்கள் எமக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பிரசுரிக்காது நாம் தகவலை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். இஞ்சினியர் தனது குஞ்சுமணிக்கா அல்லது தனது இஞ்சினியர் என்ற பட்டத்திற்கா இந்த சீதனத் தொகையை நிர்ணயித்தார் என்பது தொடர்பாக இவர்கள் திருமணம் முடிக்காது விவாகரத்துப் பெற்றால் விபரமாக புகைப்படங்களுடன் வெளியிடுவோம்.

