புதினங்களின் சங்கமம்

கொழும்பு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்..!! (Video)

இலங்கையில் பொலிஸார் சோதனையிட சென்ற போது கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் பை நிறைய வெடிகுண்டுகளுடன் சென்று முகம்மது தலா ஃபாரான் என்கிற பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில், ஷாங்கரி-லா ஹோட்டல் மற்றும் சின்னமன் கிரான்ட் ஹோட்டல் ஆகியவற்றில் தாக்குதல் நடைபெற்றது.

இது சம்மந்தமாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டு ஹோட்டல்களிலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் முகவரிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு பயங்கவாதி போலியான முகவரியை கொடுத்திருக்கிறார். ஆனால் மற்றொருவர் உண்மையான முகவரியை கொடுத்துள்ளார்.

உடனே அந்த முகவரிக்கு சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொள்ள முற்படுகையில், கர்ப்பிணியாக இருந்த பாத்திமா திடீரென தன்னுடைய உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாத்திமாவின் வயிற்றில் இருந்த குழந்தை, வீட்டில் இருந்த மற்ற இரண்டு குழந்தைகள் மற்றும் விசாரணைக்கு சென்ற மூன்று பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேசமயம் அவருடைய வீட்டை சுற்றிலும் வசித்த பொதுமக்கள் சிலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, ஷாங்கரி-லா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இல்ஹாம்(36) என்பவரின் மனைவி தான் பாத்திமா என்பதும், சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது அவருடைய 38 வயது சகோதரன் Inshaf என்பதும் தெரியவந்துள்ளது.

கொழும்பின் கிழக்குப் பகுதியிலுள்ள செம்பு தொழிற்சாலையில் இருந்து தான் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு ஒரு அறையில் 15 படுக்கைகள் இருந்தன. கொடூர திட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் உறங்கி கொண்டிருந்த 23 இந்தியர்களுடன் சேர்த்து 11 வங்கதேச இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Inshaf 1.5மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆடம்பர வீட்டில் தன்னுடைய மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய மைத்துனர் அஷ்கான் அலாவுதீன் கூறுகையில், குண்டுவீச்சு நடந்து கொண்டிருந்த போது நான் பெரும் பயத்திற்கு உள்ளாகிவிட்டேன்.

நான் மொத்த அதிர்ச்சியில் இருந்தேன். என்னுடைய மைத்துனர் வெள்ளிக்கிழமையன்று சாம்பியாவிற்குச் செல்வதாக என்னுடைய சகோதரி மற்றும் அவருடைய 4 குழந்தைங்களிடம் கூறிவிட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

அவர் செல்வதற்கு முன் என்னுடைய தங்கையின் தலையில் கைவைத்து, ‘வலுவாக இரு’ என கூறினார்.

அந்த நேரம் விசித்திரமாக இருந்தது. அவர் வெளிநாட்டில் ஒரு வேலைக்காக செல்கிறார் என்று தான் என்னுடைய சகோதரி நினைத்துக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு நாங்கள் அனைவரும் கொழும்பிலிருந்து வெளியேறி எங்களுடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டோம். இப்படிபட்ட தாக்குதல் செய்தியை கேள்விப்பட்டு என்னுடைய அக்கா மனமுடைந்து போய்விட்டாள்.

இந்த திட்டம் குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நானே பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருப்பேன். அவன் ஒரு மனநோய் பிடித்தவன். நிச்சயம் நரகத்தில் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.