புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் ஆற்றில் பெண் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! வீடியோ

மட்டக்களப்பு – கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய திருசந்திரன் சஹாரா என்ற யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.