புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் முஸ்லீம் ஒருவனால் குத்திப் படுகொலை!(Photos)

மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பாலமுனையைச் சேர்ந்த 35 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்றுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பில், சமாதானம் செய்யச் சென்றபோதே பொலிஸ் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: 1 personNo photo description available.