புதினங்களின் சங்கமம்

யாழில் ஓ.எல் பிள்ளைகளை படிக்கவிடாமல் குழப்படி செய்யும் சங்கானை மாளியாவத்தை வைரவர்!! வீடியோ

ஐனாதிபதியின் பதில் என்ன?
சுமார் ஒன்றரை வருடங்கள் இழுபறியின் பின்னர் கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட பொறுப்பில்லாமல் பல ஆலயங்களில் ஒலிபெருக்கிகள் கட்டி இரைந்துகொண்டிருக்கிறார்கள் சிலர்.
சங்கானை மாளியாவத்தை வைரவர் ஆலயத்தில் இன்று (31) பத்திற்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளையும் ,பாரிய அதிர்வை ஏற்படுத்தும் ஒலிப்பெட்டிகளையும் பொருத்தி றீமிக்ஸ் குத்துப்பாட்டு போட்டு அயலில் உள்ள ஓ எல் மாணவர்களின் வாழ்வில் மண்ணையள்ளிப் போட்டுள்ளார்கள் மாளியாவத்தை இந்து இளைஞர் மன்றமும் ஆலய நிர்வாகத்தினரும். ஓ.எல் மாணவர்களின் பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து செயற்படும்படி அண்மையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை கவனிக்கத்தக்கது. இப்படிப்பட்ட பொறுப்பில்லாத காவாலிகளுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கைதான் என்ன இச்செயற்பாடுகளால் எதிர்காலத்தினை இழந்த மாணவர்களுக்கு இக்காவாலிகள் பதில் சொல்வார்களா?