புதினங்களின் சங்கமம்

யாழில் 16 வயது மாணவியை அலங்கோலப்படுத்தி நடுத்தெருவில் நிறுத்திய ஏஞ்சல் பாடசாலை!!

யாழ் மானிப்பாயில்  ஏஞ்சல் எனும் பெயரில் இயங்கும் தனியார் சர்வதேச பாடசாலை அங்கு கல்வி கற்கும் மாணவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. குறித்த பாடசாலை தொடர்பில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ள நிலையில் மற்றமொரு செயற்பாடு ஏஞ்சல் பாடசாலையின் தரத்தை மிகவும் குறைத்துள்ளது. சர்வதேச பாடசாலையாகச் செயற்படும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இலங்கையில் நடக்கும் கல்விப் பரீட்சைகளில் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவதில்லை. இந் நிலையில் அங்கு கற்கும் மாணவர்களில் தரம் 11 இல் கற்கும் மாணவர்களை இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்படும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை அனுப்பியே குறித்த பாடசாலை மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதுகின்றார்கள்.  குறித்த பாடசாலையால் அனுப்பப்பட்ட தனிப்பட்ட விண்ணப்பங்களில் ஏராளமானவை தவறாக நிரப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.  இதனால் அங்கு கற்கும் மாணவர்களில் சிலருக்கு அனுமதி அட்டைகள் அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. தமக்கு அனுமதி அட்டைகள் வரவில்லை என்பதால் குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று பெற்றோர் வினாவிய போது தபால்திணைக்களத்தை குறித்த பாடசாலை நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இந் நிலையில் அப் பாடசாலையில் க.பொ.த சாதாரணதரம் கற்கும் மாணவியின் உறவினர்கள் கல்வி அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவித்த போதே மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவங்கள் பிழை பிழையாக நிரப்பப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்கள். இதனால் குறித் மாணவி உட்பட்ட பலர் க.பொ.த பரீட்சை எழுத்த முடியாத நிலையில் நடுத்தெருவில் நிற்பதாக தெரியவருகின்றது.

குறித்த ஏஞ்சல் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வித்தகுதிகள் அற்றவர்கள் என்பதுடன் பாடசாலை நிர்வாகமும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் பணம் பறிப்பதையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஒரு தவணைக்கு 20 ஆயிரம் ரூபாவை குறித்த பாடசாலை மாணவர்களிடமிருந்து அறவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.