யாழ்ப்பாணம் துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைை மறைவாக இருந்த பிரதான சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கைது செய்தன்ர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வாரம் துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரை நான்கு பேர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாளினால் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்தப் கொடூர தாக்குதல் சம்பவத்தில ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த கொலைக்கான காரணம் நான்கு மாதங்களின் முன்பு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் பின்னணி என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்த நிலையில் கொலையாளிகளை தேடி பருத்தித் துறை பொலிசார் வலைவீசி யிருந்தார்.
சம்பவத்தில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் 27 வயது மதிக்கத்தக்க விஜிந்தன் ( வெள்ளையன்) என்ற பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் புதுக் குடியிருப்பு பகுதியில் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





