புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண ஆவா குழுவின் 001 என்ற பிரிவைச் சேர்ந்த காவாலிகளை பிடித்தனராம் பொலிஸ்!! நடப்பது என்ன? (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுக் காவாலிகள் இயக்கப் பாணியில் அரசியல் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, அதிரடிப்படைப் பிரிவு, நிதிப்பிரிவு என பல பிரிவுகளை உருவாக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது வடிவேலு பாணியில் பொலிசார் பிள்ளைப் பூச்சிகளைப் பிடித்து நீதிமன்றில் ஒப்படைக்கின்றனரா?   என சமூகவலைத்தளங்களில்  பதிவுகள் வெளியாகி வருகின்றன….

ஆவா குழு அங்கத்தவர்கள் என தெளிவான புகைப்படங்களுடன் 140 ற்கும் மேற்பட்ட காவாலிகளின் பெயர் விபரங்களை நாம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். அந்தக் காவாலிகளில் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆவா குழுவின் அதிரடிப்படைப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அணியின் வீடியோவை நாம் இங்கு வெளியிடுகின்றோம். இந்தக் காட்சியில் தோன்றுபவர்களில் 80 வீதமானவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் தன்னை சமூகப்புரட்சியாளனாகக் காட்டிக் கொள்ளும் அருன்சித்தார் என்ற போதைப் பொருள் முகவரின் அடியாட்களே இவர்களாவார். அரசாங்கத்திற்கு ஆதரவாக நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அருன்சித்தார்த் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களை பெரும்பாண்மையாகக் கொண்ட  இவர்கள் போதைப் பொருட்கள் கொடுத்து பயன்படுத்தப்படுகின்றனர். அத்துடன் இவர்களை அரச புலனாய்வாளர்கள் தங்களது சில தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான குழுக்களைத் தவிர வேறு யாராவது தமக்குள் குழுக்களை அமைத்து செயற்பட தொடங்கினால் உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுகின்றார்கள் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றது.

 

 

இன்றைய செய்தி

யாழ்ப்பாணம், அரியாலையில் ஆவா ரௌடிகளை முன்மாதிரியாக கொண்டு உருவாகி வந்த வன்முறைக் கும்பலை பொலிசார் அடையாளம் கண்டு, களையெடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கும்பலை சேர்ந்த 2 பேர் வாள்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அரியாலை, பூம்புகார் பகுதியில் ‘வேலைவெட்டியற்ற’ இளைஞர்கள், பாடசாலையை விட்டு விலகியவர்கள் இந்த வன்முறைக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

15 வயது தொடக்கம் 25 வயதுக்கிடைப்பட்ட சுமார் 20 பேர் இந்த வன்முறைக்கும்பலில் அங்கம் வகித்துள்ளனர்.

ஆவா ரௌடிகள் 001 என தம்மை குறிப்பிட்டு, இந்த அடையாளத்துடனேயே சமூக வலைத்தளங்களில் செயற்பட்டனர்.

தற்போது கைதான கும்பல் 002 என வட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்கி செயற்பட்டுள்ளது. இந்த வட்ஸ்அப் குழுவில் வாள்களுடன் படங்களை பதிவிட்டு வந்தனர். வெளிநாட்டிலிலுள்ளவர்களை கவரும் விளம்பர உத்தியாக ஆயுதங்களுடன் படங்களை பதிவிட்டு, அவர்களில் யாருக்கேனும் தேவைப்படின் பணத்தை பெற்று, வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும், இதுவரை பெரிய வன்முறைச் சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டிருக்கவில்லை.

இந்த கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததும், கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார், அந்த கும்பலின் இருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். 25, 18 வயதான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.