“2 முறை அதற்கு முயன்றேன்… முடியவில்லை.. வெறும் கிஸ் மட்டும்தான் அடித்தேன்“!! குண்டனின் வாக்குமூலம் இதோ!!
நாங்கள் இருவரும் ஒன்றாக அறையில் இருந்தோம். அவள் விருப்பத்துடன் என்னுடன் தங்கினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதன் பிறகு அவள் அசிங்கமான விஷயங்களைச் செய்யாதே, நான் இப்போது சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கத்த ஆரம்பித்தாள். திடீரென ஜன்னலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக குதித்துள்ளார்” என களுத்துறையைச் சேர்ந்த 16 வயது மாணவியின் சர்ச்சைக்குரிய மரணத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் வாடகை காரில் பயணித்த போது, ஹிக்கடுவ பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் வாடகை கார் ஒன்றை பெற முயல்வது பொலிசாருக்கு அறிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்திய பொலிசார், ஹிக்கடுவை பகுதியில் வீதித்தடுப்பை பயன்படுத்தி அவரை கைது செய்தனர்.
அவர் படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி மாலை 9.30 மணியளவில், களுத்துறை தெற்கு, சிறிகுருச சந்தியில் அமைந்துள்ள ‘சீ வியூ சிட்டி ஹோட்டல்’ கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தார்.
களுத்துறை தெற்கு நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திஹார திரானி நிஷங்க சில்வா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இவர்கள் ஹொட்டலுக்கு வந்தனர்.
16 வயதான மாணவி, அவரது பாடசாலையில் கல்வி பயிலும் அயல்வீட்டிலுள்ள 19 வயதுடைய பாபரா என்ற மாணவி, அவரது 21 வயதான காதலன் இஷான், 29 வயதான தனுஷ்க கயான் சஹபந்து ஆகியோர் ஹொட்டலுக்கு வந்தனர்.
மாணவிகள் இருவரும் வயதில் குறைந்தவர்கள் என்பதால், உயிரிழந்த மாணவி, அயல்வீட்டிலுள்ள இன்னொரு 20 வயதான நண்பியின் அடையாள அட்டையை வாங்கி வந்திருந்தார். அவரது அடையாள அட்டை பதிவின்படியே ஹொட்டலில் அறையெடுத்தனர்.
களுத்துறை, இசுரு உயன, பாலத்தோட்டையில் வாடகை வீட்டில் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து இரண்டு திருமணம் செய்தவர். முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டே இரண்டாவது திருமணத்தை செய்துள்ளார்.
உயிரிழந்த விஹார நிர்மானி என்ற மாணவி திட்டமிட்டு விடுதிக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிகிறதாகவும், மாணவி மரணமான அன்று காலை பிரதான சந்தேகநபரும் அவனது நண்பரும் களுத்துறை நாகொடையில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் சென்று அவர் நல்ல தோற்றமுடைய, கவர்ச்சியான பெண்ணா என பார்க்கச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் 19 வயதான பாபரா என்ற நண்பி வசித்தார். அவரது 21 வயதான காதலன் இஷானும், பிரதான சந்தேகநபரும் நண்பர்கள். பாபராவும், இஷானும் அடிக்கடி விடுதிகளுக்கு சென்று தங்கியுள்ளனர். இந்த ஜோடி மே 6ஆம் திகதி சந்திக்க முடிவு செய்தது. பாபரா பாடசாலை சக மாணவன் ஒருவருடன் விடுதியில் தங்கிய குற்றச்சாட்டில் முன்னர் ஒருமுறை பாடசாலையில் இடைநிறுத்தப்பட்டவர்.
பாபராவின் காதலன், பிரதான சந்தேக நபரிடம் இன்னொரு நல்ல பெண் இருப்பதாகவும், அவரை செட் செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.
சரி, அந்தப் பெண்ணை நேரில் பார்ப்போம். அழகான பெண்ணாக இருந்தால் பார்ட்டிக்கு அழைப்போம் என பிரதான சந்தேகநபர் கூறியுள்ளார்.
அதன்படி நண்பர்கள் இருவரும் மதியம் 2.30 மணியளவில் காரில் வந்து பெண் பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.
இருவரும் 19 வயது இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். 16 வயது சிறுமியை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து பிரதான சந்தேக நபரிடம் இந்த 19 வயது சிறுமி காட்டியுள்ளார்” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபருக்கு மாணவியை பிடித்துள்ளது.
16 வயதுடைய மாணவி தனது சொந்த விருப்பத்தின் பேரில் களுத்துறை ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
19 வயது யுவதிதான், 16 வயது மாணவியின் அடையாள அட்டை என்று கூறி, பழைய அடையாள அட்டையை ஹோட்டலில் காட்டினார்,” என பொலிஸ் அதிகாரி கூறினார்.
ஹொட்டலின் ஐந்தாவது மாடியில் அறையொன்றை முன்பதிவு செய்ததாகவும், மது அருந்திவிட்டு 19 வயது யுவதியும் அவரது காதலனும் வேறு அறைக்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
16 வயது மாணவியும், 29 வயதானவரும் மனமுவந்து அறையில் இருந்ததாகவும், பிரதான சந்தேகநபரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், அன்றைய தினம் மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லையென்றாலும், இதற்கு முன்னரும் மாணவி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, மாணவியுடன் உடலுறவு கொள்ள விரும்பிய போதிலும், “உடல் இயலாமை“ காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. விசாரணை அதிகாரிகளும் அறையை ஆய்வு செய்தபோது இந்த உண்மையை கவனித்தனர். இருவரும் அறையில் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும் அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை என்றும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் மீண்டும் மது அருந்தத் தொடங்கியதாக பொலிஸ் விசாரணையின் போது பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
மது அருந்திவிட்டு மாணவியுடன் உடலுறவு கொள்ள முயன்றதாகவும், அதுவும் தோல்வியில் முடிந்ததாக சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, நடனமாடியதாகவும், அப்போது மாணவியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும், மாணவி கோபமடைந்து திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது மாணவி நிர்வாணமாக இருந்துள்ளார். நாய் வேலை செய்யாதே, பிளாக்மெயில் செய்யாதே, நான் எப்படி இந்த சமூகத்தின் முன் போவது என தொலைபேசியில் திட்டியபடி, அறையின் யன்னல் பக்கம் ஓடிப்போய், கதிரையில் ஏறி, கீழே குதித்ததாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

