மாணவிகள் 16 பேரை தனித் தனியாக காட்டுக்குள் கொண்டு சென்று காருக்குள் வைத்து உறவு கொண்டு வீடியோ பதிவு செய்த ஆசிரியர்!! மனைவி பார்த்ததால் தப்பி ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!!
களுத்துறையில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஆசிரியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று மாலை வரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வகுப்பறையில் பாடசாலை மாணவிகளை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, களுத்துறை, லகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவங்களை தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்தும் வைத்துள்ளார்.
மேலும், சூம் தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடத்த மாணவிகளுக்கு இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை கழற்றுமாறு அறிவுறுத்தி, அந்த காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து பாலியல் வீடியோக்களையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டறிந்து, மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாக தொடங்கியது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகத்திற்குரிய கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
