புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி அதிபர் ரஜனிதேவியின் வீட்டு கக்கூசும் நாறுகிறதா? வேம்படி கக்கூசுகளின் அதிர்ச்சி Video

யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் உள்ள மலசலகூடம் உட்பட பல விடயங்களைப் பார்க்கச் சென்ற கல்வி அதிகாரிகளுக்கு முகம்சுளிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பாடசாலைக்குச் சென்ற கல்வி அதிகாரிகளை முறைப்பாடு எழுத வேண்டாம் என அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் மாணவிகள் பயன்படுத்தும் மலசல கூடம் சீரின்மை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலையில் மலசல கூடம் உட்பட வகுப்பறைகளை ஆய்வு செய்த மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு பல விடயங்கள் ஆச்சரியமடைய வைப்பதாகவும் முகம்சுளிக்க வைப்பதாகவும் அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பாடசாலையில் தாம் ஆய்வு செய்த விடயங்களை அறிக்கைப்படுத்த முற்பட்டபோது நிறுத்துமாறு தொலைபேசியில் அழுத்தம் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலை மலசலகூடம் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் அனேகமான மாணவிகள் பாடசாலையில் மலசல கூடத்தை பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை அதிபர் ரஜனிதேவி முத்துக்குமரன் தனது வீட்டு மலசலகூடத்தை எவ்வாறு பராமரிப்பார் என சிந்திப்பவர்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம்….

வேம்படி கல்லுாரி பழைய மாணவிகள் தாங்கள் படித்த பாடசாலையின் கக்கூசு நிலை அறியாமல் பாடசாலையின் பெயரில் பல்வேறு நாடுகளிலும் பல பல திருவிளையாடல்களை செய்து கொண்டு திரிகின்றார்கள்….

தமிழ்முரசு Tamil Murasu: வேம்படி மகளிர் பாடசாலையின் நிகழ்ச்சி -கௌரிதமிழ்முரசு Tamil Murasu: வேம்படி மகளிர் பாடசாலையின் நிகழ்ச்சி -கௌரி