முன்னாள் போராளியான பிரதேசசபை உறுப்பினர் யாழ் போதனாவைத்தியசாலையில் மரணம்!!
Deta அமைப்பின் மாநாடு ரில்கோ விடுதியில் (2018)
ஒரு ஊடகவியலாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.
அன்று தான் இந்த அசைக்க முடியாத ஆளுமையை கண்டேன்.
வியந்தேன். மனசால் கதைத்தேனே தவிர நேரில் கதைத்ததில்லை.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒருவர் என அவர் சொன்னால் தான் மற்றவர்களுக்கு புரியும். அந்த அளவுக்கு தன்னை பொருட்டாக பார்த்ததில்லை. சர்க்கர நாற்காலி ஓய்வின்றி சுழன்றது. அது அவருக்கு விமானத்திற்கு சமனாகவே இருந்தது.
வேகம் விவேகம் துடிப்பு என ………அவை.
மாற்றுத்திறனாளிகளின் குரலாக எதிர்காலத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஆசை அவரது நண்பர்களிடம் துளிர் விட்டிருந்தது.
“”என்ன கொடுமை? ….. முள்ளந்தண்டில் செல் பீஷ் இருந்தது அது கடந்த சித்திரையில் சத்திரசிகிச்சை செய்தது. அதன் பின் அந்த இடத்தில் கிருமித் தொற்றாகி கிருமி மூளை வரை சென்ற நிலையில் ; கவனமற்ற நிலையில் மருத்துவம் தோல்வி கண்டுள்ளது .I C U வில் தான் இருந்தார் “”என அவரது நண்பர்களின் வேதனைகள் அளவிடமுடியாதவை.
ஆளுமையின் அர்ப்பணிப்பை இழந்து துயருறும் குடும்பத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் என் அன்பு.
யாழ்.தர்மினி பத்மநாதன்
01.06.2021




