17 வயது சிங்கள யுவதியை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் மிளகாய்துாள் பூசிய 18 வயது காதலனுக்கு சிறை!!
17 வயது காதலியை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் மிளகாய்த் தூள் வீசிய காதலனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி நேற்று (11) உத்தரவிட்டார்.
மினுவாங்கொடை ஹலகந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் மேலும் குறித்த சிறுமி கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரு தரப்பினரின் உறவினர்களும் தெரிந்தே இருவருக்கும் இடையே காதல் உறவைப் பேணி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் முறைப்பாடு செய்தவரை மோட்டார் சைக்கிளில் காமரகொட பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த வீட்டின் அறையொன்றில் இருவரும் இருந்த போது, அவர்களிற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்த வீட்டு சமையலறைக்கு சென்று, மிளக்காய்த்தூள் பேணியை எடுத்து வந்துள்ளார்.
காதலியை நிர்வாணமாக்கி, அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூள் வீசியுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
