கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

யாழில் 3 கலியாணம் செய்த முஸ்லீம் குடும்பஸ்தர்!! கட்டி வைத்து அடித்த தமிழ் மனைவி!!

போதைக்கு அடிமையான தனது கணவனை கட்டி வைத்து அடித்துள்ளார் சாவகச்சேரி பெண்ணொருவர்.
அதனால் படுகாயமடைந்த கணவன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக
சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த இப்ராஹிம் நாசர் (36) என்பவர், சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில்
தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார். இது அவருக்கு மூன்றாவது திருமணம்.

புத்தளம், அச்சுவேலி பகுதிகளில் ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்து ஆறு குழந்தைகள்
உள்ளன. அச்சுவேலி மனைவிக்கு தாபரிப்பு பணம் வழங்கி வருகிறார். தற்போது சாவகச்சேரி
தனங்கிளப்பு பகுதியில் தமிழ் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளார். அவர்களிற்கு இரண்டு
குழந்தைகள் உள்ளனர்.

இந்த நபர் போதைக்கு அடிமையானவர் என்றும், இதனால் மனைவி மற்றும் குடும்பத்தினரை
தாக்குவது வாடிக்கையானது என்றும் கூறப்படுகிறது. அவரது தாக்குதலில் பாதிக்கப்பட்ட
மனைவியின் தாயார் அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்து அட்டகாசம் செய்த கணவனின்
நடவடிக்கைகளை பொறுக்க முடியாத மனைவி, அவரை கட்டி வைத்து விட்டு நையப்புடைத்துள்ளார்.
தாக்குதலில் நாசரின் தலையில் காயமேற்பட்டது.

பின்னர் அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மனைவியே அழைத்து வந்து, அனுமதித்தார்.

தற்போது மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நபர் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளார்.