யாழ்.வலி -தெற்கு பிரதேசசபை கருணாகரன் தர்சனின் திருவிளையாடல்!!மாணவர்கள் பெரும் திண்டாட்டம்!
யாழ்.வலி -தெற்கு பிரதேசசபையின் கையாலாகத்தனம்!மக்கள் பெரும் அவதி!
யாழ்ப்பாணத்தில் காலைவேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான வீதியான மருதனார்மடம்-உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பி்தேச்சபையினரால் அறிவித்தல் பலகை போடப்பட்ட இடத்தில்தான் மணல் டிப்பர் உள்ளிட்ட கனரகவாகனங்கள் நிறுத்தப்படுகின்றது. ஆரம்பித்தில் வீதியின் ஒருபக்கத்தில் மட்டும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது இருபக்கமும் நிறத்தப்படுவதுடன் அதனை நிறுத்தியோர் நடுவீதியில் நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதுடன் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகவும் நடந்துகொள்கின்றனர்.
உடுவில் மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, பல்கலைக்கழக நுண்கலை துறை ,இணுவில் இந்துக்கல்லூரி செல்லும் மாணவர்களும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இப்பகுதியில் அண்மைக்காலத்தில் விபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இங்கு தரித்துநிற்கும் மணல் டிப்பர்கள் மாணவர்கள் பாடசாலை செல்லும் நெரிசல்நிறைந்த நேரத்தில் வீதியில் பயணம் செய்வதால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த ஆபத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது.
அறிவித்தல்பலகையினை மட்டும் நாட்டிவிட்டு மௌனம் காப்பதேன் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்சன்?




