புதினங்களின் சங்கமம்

யாழ் அளவெட்டி கோயிலில் ஐயரின் திருவிளையாடல்!! “பிறிட்சில்“ வைத்த புக்கை!!

யாழ் அளவெட்டியில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றில் இன்றைய தினம் முக்கிய திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்த நிகழ்வில் கோவிலுக்கு வந்த திருவிழா உபயகாரர் மற்றும் பக்தர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்த பிரசாதம் வழங்கப்பட்டதாக பக்தர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். குறித்த கோவில் ஐயரின் இவ்வாறான செயற்பாடு இனிவரும் காலம் தொடர்ந்து நடந்தால் குறித்த கோவில் மற்றும் ஐயரின் பெயர் விபரங்கள், புகைப்படங்களுடன் பதிவுகளை பக்தர்கள் தமது முகப்புத்தகத்தில் வெளியிடுவார்கள் என பக்தர்கள் தரப்பிலிருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.