FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண மீற்றர் வட்டி கொடூரன் ஜெகனின் மற்றுமொரு கொடூரம்!! வீடியோ

கிளிநொச்சியில் கஞ்சா காவாலி மற்றும் அவனது தாயால் அடாத்தாக கைப்பற்றப்பட்ட ஜேர்மனி புலம்பெயர் தமிழனின் காணியும்… அதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு கஞ்சா பாவணையாளரான தன்னை சமூகத்தொண்டாற்றுபவர் என கூறிச் செயற்படும் ஒருவர் உட்பட்டவர்களின் திருவிளையாடல் செயற்பாடுகளை மிக விரைவில் உங்கள் முன் கொண்டு வருவோம்… காத்திருங்கள்…

இவன்தான் யாழ் சுன்னாகத்தில் மீற்றர் வட்டிக்கு கொடுத்து வட்டி கொடுக்காதவர்களை கொடூரமாக தாக்கிய ஜெகன் என்பவன்.

May be an image of 1 person, beard, outdoors and text that says "jegan"

அண்மையில் தோட்டம் ஒன்றினுள் சிலரை கொடூரமாக இவன் தாக்கிய வீடியோக்களை நாம் பதிவிட்டிருந்தோம். இவனது இன்னுமொரு கொடூரச் செயலை நாம் இங்கு தந்துள்ளோம். ஜெகனுக்கு சுன்னாகம் மற்றும் தெல்லிபளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சில பொலிஸ்காரர்களும் உடந்தை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். அத்துடன் பாதுகாப்புத்தரப்புடனும் ஜெகன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் குறித்த ஒரு சட்டத்தரணி அவனை பிணையெடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான காவாலிகள் சிலரை அவர்களுக்கு குறித்த கஞ்சா, போதைப் பொருட்களை குறைந்த விலையில் கொடுத்து தனது அடியாட்களாக இவன் வைத்துள்ளான். சினிமாக்களில் வரும் வில்லன் போல் ஆட்களை கடத்தி சித்தரவதை செய்வதை மிகவும் அப்பட்டமாக செய்து வரும் ஜெகனுக்கு நீதித்துறை என்ன பதில் வழங்கப் போகின்றது.

போதைப் பொருளுக்கு அடியாளான ஜெகனின் அல்லக்கைகளில் ஒருவன்….

May be an image of 1 person, beard, standing, outdoors and text that says "Muththu"

May be an image of 1 person