கிளிநொச்சியில் ஜேர்மன் தமிழனின் காணியை ஆட்டை போட்ட குடும்பம்!! வீட்டை உடைத்து துரத்தி அடித்த சம்பவம்!! சிறிதரன் கொலை வெறி!! Video)
இது புலம்பெயர் தமிழர் ஒருவனது பேஸ்புக் ஒன்றில் வெளிவந்த பதிவாகும்.
கிளிநொச்சி நாட்டாமை சிறிதரனின் அடியாட்களால் புலம்பெயர் தமிழனின் காணி அபகரிக்கப்பட்டு பல காலமாக சிறிதரனுக்கு ஆதரவான குடும்பம் ஒன்று அங்கு குடியிருத்தப்பட்டிருந்தது. குறித்த குடும்பத்துக்கு புலம்பெயர் தமிழனின் காணியை சொந்தமாக்கி தருவதாக சிறிதரன் தரப்பு கூறியுள்ளது. அத்துடன் அந்தக் காணிக்குள் வீடு ஒன்றும் சிறிதரன் தரப்பால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் பல தடவைகள் புலம்பெயர் தமிழனான குறித்த காணிச் சொந்தக்காரன் வீட்டை விட்டு எழுந்து செல்லுமாறும் காணிக்குள் குறித்த குடும்பம் ஏதாவது செலவு செய்திருந்தால் அல்லது குறித்த வீட்டை கட்டியதற்கான செலவுகள் எவ்வளவோ அத்தனை செலவையும் தருவேன் என கூறி பல தடவைகள் அவர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் புலம்பெயர் தமிழன் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு ஒன்றும் புடுங்க முடியாது, காணியை உனக்கே சொந்தமாக்கித் தரும் நடவடிக்கைகளை நான் மேற் கொண்டு வருகின்றேன்….காணியை விட்டு வெளியேற வேண்டாம் என சிறிதரன் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கு கூறியுள்ளார்கள். இதனால் புலம்பெயர் தமிழனின் வேண்டு கோளை குறித்த குடும்பத்தவர்கள் ஏற்றுக் கொள்ளாது காணியை விட்டு வெளியேறாது இருந்ததுடன் வெளிநாட்டிலிருந்து வந்தால் அட்ரஸ் இல்லாமல் போவீர்கள் என அச்சுறுத்தி வந்ததாகவும் புலம்பெயர் தமிழனின் தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த புலம்பெயர் தமிழனால் குறித்த காணியில் நடாத்தப்பட்ட சம்பவம் கீழே வீடியோவில் தரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கதைப்பவர்கள் சிறிதரனின் அல்லக்கைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். குறித்த வீடியோ தொடர்பாக உங்களது கருத்துக்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார்கள் காணியின் சொந்தக்காரர்களான புலம்பெயர் தமிழன் தரப்புக்கள்…
கீழே வெளியிடப்பட்டுள்ள வீடியோ சிறிதரனின் ஆதரவாளரால் வெளியிடப்பட்ட வீடியோ ஆகும்.
காணியில் அத்துமீறி இருக்கும் குறித்த குடும்பத்தின் அடாவடி இது

