பெண்களுக்கு சேலை அணியச் சொல்வது மார்பையும் வயிற்றையும் ரசிப்பதற்கே!! யாழ் முக்கியஸ்தர் பேச்சால் பரபரப்பு!!
பெண்களிற்கு சட்டை நல்ல ஆடை. ஆனால் மார்பையும்,
வயிற்றையும் காட்டும் சேலையை அணிய வேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு
சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே ஆண் ஒருவர்
எழுதிய சுற்றறிக்கையை போல இது உள்ளது.
இப்படி வில்லங்கமாக பேசியுள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவரான ரட்ணஜீவன் கூழ்.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஆணைக்குழுவின் புதிய கட்டடத்திற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு
தெரிவித்தார்.
2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை நாடு நரகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஆப்கானிஸ்தான் அகதிக்குடும்பம் ஒன்றை யாழிற்கு
தனிப்பட்டரீதியாக அழைத்து வந்து தனது மகளின் வீட்டிற் குடியமர்த்த
முயன்றிருந்தார். எனினும், பொலிசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி அதை
அனுமதிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஈ.பி.டி.பியுடன் நெருக்கமாக இருந்த
ரட்ணஜீவன் கூழ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பதவியை பெற முயற்சித்த
போதும், டக்ளஸ் தேவானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து,
ஈ.பி.டி.பியுடன் முரண்பட்டார் என்றும், தேர்தல் ஆணைக்குழுவிற்கான
அங்கத்துவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிபாரிசில் பெற்றார் என்றும்
செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.