புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பா? மட்டைக்களப்பா சரியான சொல்லு!! 200 வருடங்களுக்கு முந்திய ஆதாரம் இதோ!!

்200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்த ஆரம்பகாலங்களில் தற்போது மட்டக்களப்பு என கூறப்படும் எமது பிரதேசம் அந்த நேரங்களில் மட்டைக்களப்பு என்றே கூறப்பட்டு வந்துள்ளது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரும் அவ்வறே கூறப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் தற்போது அது மருவி மட்டக்களப்பு என கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஏராளமான ஊர்களின் பெயர்கள் மருவி மாற்றமடைந்து தற்போது கூறப்படுகின்றது.

ஆங்கிலேயர்களின் பதிவுகளின்படி மட்டக்களப்பில் 200 வருடங்களுக்கு முற்பட்டு வாழ்ந்தவர்கள் வேடுவர்களாகவும் மீனவர்களாகவுமே வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் இந்துத் தெய்வங்களில் முருகனையும் வெவ்வேறு பெயர்களில் தேவதைகள் என கூ்றப்பட்ட கிராம தெய்வங்களையும் தமது ஊர்களில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். ஏற்கனவே அங்கு போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்களால் மதம்மாற்றப்பட்டும் சில ஊர்களில் கிறீஸ்தவ சிலுவை வழிபாடும் நடந்துள்ளது. இதே வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பிராமணர்கள் மற்றும் இந்துக்கள் குறித்த மக்களை சிவன் உட்பட்ட இந்துக்கடவுள்களை வழிபடுவதற்கான நடவடிக்கையில் இறங்கியதால் அங்கு ஆங்கிலேயர்களுக்கும் பிராமணர்கள் மற்றும் யாழ்ப்பாண இந்துக்களுக்கும் முரண்பாடுகள் வந்துள்ளது. மண்டூர் பகுதியிலிருந்து அடர்ந்த காட்டுப்பாதையூடாக கரடியன் ஆறு, குடும்பிபாறை( இது தொப்பிகல என்று இப்போது பெயர்), வெள்ளம்பெருக்கு, முக்குண்டுமலை, புங்கைக்குன்று, முதலைக்குளம் போன்ற இடங்களின் ஊடாக மாங்குளம் பகுதியில் உள்ள கருப்பட்டமுறிப்பு வரை வடக்குக்கும் கிழக்குக்குமான பாதை அந்தக்காலத்தில் இருந்துள்ளது. கருப்பட்டமுறிப்பில் இருந்து அடர்காட்டுப்பாதையூடாக அம்பகாமம், காயாமோட்டை, முரசுமோட்டை என்ற பகுதி ஊடாக ஒரு பாதை யாழ்ப்பாணத்திற்கான தொடர்பாய் இருந்துள்ளது. அம்பகாமத்திலிருந்து முறுகண்டி ஊடாக பூநகரிவரையும் இன்னொரு பாதை இருந்துள்ளது.
குறிப்பு – இந்தத் தகவல்கள் 1840 ம் ஆண்டுகள் வெளிவந்த உதயதாரகை பத்திரிகை மற்றும் அந்தக் காலத்து புத்தகங்களில் என்னால் வாசித்து உய்த்தறிந்த தகவல்கள் ஆகும்.

பேஸ்புக் பதிவு ஒன்றில் பிரதி செய்யப்பட்டது

No photo description available.No photo description available.