புதினங்களின் சங்கமம்

கொக்கட்டிச்சோலையில் படகு மூழ்கியதில் ஆசிரியர் பலி – 3 மாணவர்களை காணவில்லை!

தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று பிற்பகல் சென்றிருந்தனர்.

இதன்போது, 3 மாணவர்களுடன் படகு ஒன்றில் பயணித்த சந்தர்ப்பத்தில், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த மாணவர்கள் காணமல்போயுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை மீட்பதற்கு முயற்சித்த ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகளை பிரதேச மக்களுடன் இணைந்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of 6 people, people sitting and outdoors