யாழில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி. மாமனார் படுகாயம்!
இன்று மாலை யாழ் நெல்லியடியில் நடந்த குடும்பச் சண்டை ஒன்றின் போது மருமகனின் வாள் வெட்டில் மாமியார் பலியானதுன் மாமனார் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
யாழ்.வடமராட்சி பருத்தித்துறை கிராமக் கோடுப் பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு மனைவியின் தாயாரையும் மருமகன் வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே இந்தச் செயலில் ஈடுபட்ட நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
படம் Ai

