யாழில் நள்ளிரவு வேளையில் வீதியில் நின்ற நால்வருக்கு நேர்ந்த கதி!
யாழில் நள்ளிரவு வேளையில் வீதியில் நின்ற 4 பேர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி ரோந்து நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்ட வேளையில், யாழ்ப்பாண நகரப்பகுதியில் நேற்று (4-6-19)நள்ளிரவு வேளையில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நின்றுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால், கண்டியை சேர்ந்த 2 பேரும், நாவாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவருமாக 4 பேரை காவற்துறை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் என்றும், அவர்களை விசாரணையின் பின் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.