புதினங்களின் சங்கமம்

யாழில் நேற்றைய விபத்தில் பலியானது ஆவா குழு காவாலி!! (Photos)

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆவா குழுவைச் சேர்ந்த காவாலி  ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு காவாலி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் ஆவா குழுக் காவாலிகள்  வேகமாக பயணித்ததாகவும் அதில் ஒரு மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற காவாலி உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற காவாலி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த காவாலிகளின் விபத்து  தொடர்பாக ஆவா குழு தமது பதிவுகளை பேஸ்புக்கில் பதிந்துள்ளார்கள்.

”சம்பவம் ஒன்று செய்யச் சென்ற நட்புக்களே சம்பவமாகிவிட்டீர்களே” என விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல  தமது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்கள். இதே வேளை ,இவ்வாறான 17, 19 வயதுக் காவாலிகளுக்கும் பன்னாடைகளுக்கும் ரவுடித்தனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிள்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பதிவுகளை இட்டு வருகின்றார்கள்.

இவ்வாறான காவாலிகள் போதைப் பொருட்களைப் பாவித்துவிட்டு தெருவில் அதி வேகமாகச் சென்று இறப்பது மட்டுமல்லாது அப்பாவிகளாக தெருவில் போகின்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வம்பன் வீடியோக்களுக்கு இந்த இணைப்பை அழுத்தி SUBSCRIBE செய்த பின்னர் பார்வையிடலாம்

May be an image of 6 people, motorcycle and road May be an image of 7 people, motorcycle and outdoorsMay be an image of 2 people, people standing, car and outdoorsMay be an image of 2 people, car and outdoorsMay be an image of 1 person, car and outdoors

May be an image of 1 person, sunglasses, motorcycle and skyMay be an image of 1 person, sunglasses, motorcycle and sky