யாழிலிருந்து பளை நோக்கி வந்த கப் வாகனத்தை இடைமறித்து கடத்திய கும்பல்.!

யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனத்தை பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் வீதியை மறித்து, வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வாகனததை கடத்திய கொள்ளையர்களை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர்.

எனினும், சந்தேக நபர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை துரத்திச் சென்று வாகனத்தை கைப்பற்றியதுடன், 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)