யாழ் நகரிலுள்ள எஸ்.எம்.பெர்னாண்டோ மூக்கு கண்ணாடி முதலாளி துாய கொடூர போதைப் பொருளுடன் சிக்கியது எப்படி?
யாழ் நகரிலுள்ள எஸ்.எம்.பெர்னாண்டோ மூக்கு கண்ணாடி விற்பனையகத்தின் உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் நீண்டகாலமாக இயங்கி வந்த இந்த நிறுவன உரிமையாளர் போதைப்பொருளுடன் கைதானது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
அவரது கைது தொடர்பான மேலதிகமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
36 வயதான அவர், திருமணமாகி மனைவி, பிள்ளைகளுடன் யாழ் நகரில் 4ஆம் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.
அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், பொலிஸ் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் பிரதான போதைப்பொருள் வலையமைப்பு ஒன்றுடன் அவருக்கு தொடர்பிருப்பது பொலிசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
குருநகரை சேர்ந்த சுலக்ஷன் என்பவர் இந்தியாவிலிருந்து போதைப்பொருட்களை பெற்று, இலங்கைக்குள் விநியோகித்து வருகிறார். பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ள அந்த குற்றவாளியிடமிருந்து, கைதான வர்த்தகர் போதைப்பொருளை பெற்று, விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவ தினத்திலன்று, பொலிஸ் இரகசிய ஏஜெண்ட் ஒருவர் 14 கிராம் ஹெரோயின் வாங்குவதற்காக, வர்த்தகரை அணுகியுள்ளார். இதற்காக அவர் சில இலட்சம் ரூபா விலை நிர்ணயித்துள்ளார்.
19ஆம் திகதி போதைப்பொருளை தனது வீட்டில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். பொலிஸ் இரகசிய ஏஜெண்ட் போதைப்பொருளை வாங்க சென்ற போது, பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவரது வர்த்தக நிலையத்திலிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 6 மாதங்களாக பொதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கலப்படமற்ற, மிக தூய ஹெரோயின் என்பது தெரிய வந்தது. இவ்வளவு தூய ஹெரோயின் யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்மூலம், சர்வதேச போதை வியாபாரிகளுடன் யாழ்ப்பாண போதை வியாபாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டு போதைப்பொருள் பெற்று வருகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.