அசாத்அலி.. ஹிஸ்புல்லா ஆகியோர் சற்று முன் இராஜினமா!! கண்டியில் தொடர்கின்றது பதற்றம்!!
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் குறித்த இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதே வேளை
கபீர் ஹாசிம் தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய அமைச்சர்கள், தங்கள் பதவிகளைத் துறக்கவுள்ளதாக அறியமுடிகிறது…
கண்டி முடங்கியது ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் !
உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மக்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இதற்கு ஆதரவாக நீர்கொழும்பு பகுதியிலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆதரவுப் போராட்டத்திலீடுபட்டனர்.
அத்துடன் வரக்காப்பொவிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.