Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிள்ளைத்தாச்சி நாய்களுக்கும் பிரசவம் பார்க்கின்றார்கள்!! (Photos)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதிகளுக்குள் நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் அதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகமும், பிரதேச சபையும் பாராமுகமாகவே தொடர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அந்த நிலையில் இன்று வைத்தியசாலைக்கு சென்ற ஒருவர் மேற்படி புகைப்படங்களை எமது செய்திச் சேவைக்கு அனுப்பியுள்ளார். வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.