ஆடுகள் சாப்பாடில்லாமல் அழும் போது நொண்டி ஆடு அதுக்கு அழுதிச்சாம்!! கிளிநொச்சியில் நடந்த அழகிப் போட்டி! (வீடியோ)

கிளிநொச்சி மண்ணில் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 46 பெண்கள் இவ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பாரதி் Resort மண்டபத்தில் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த போட்டி இடம்பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் கலாசார உடையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்களின் நிபந்தனையாகவிருந்தது.

குறித்த போட்டி தொடர்பான வீடியோ இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இது வேளை குறித்த அழகுராணிப் போட்டி தொடர்பாக கடும் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளன. நாடு இருக்கிற நிலைமைக்கு நரிக்கு உழுந்து வடை தேவையா?? , ஆடான ஆடு எல்லாம் சாப்பாடில்லாமல் அழும் போது கிளிநொச்சி நொண்டி ஆடு மாப்பிளை இல்லை என்று அழுதிச்சாம்” என இவ்வாறான பல விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் காணப்படுகின்றன.

 

error

Enjoy this blog? Please spread the word :)