வலிகாமம் வலயத்தில தான் மாணவர் இடைவிலகல் முதலிடம்
Copied from FACEBOOK of Athavan Gnana (Valikamam Zone ADE)
என்ன சேர்?
வலிகாமம் வலயத்தில தான் மாணவர் இடைவிலகல் முதலிடமாமே?
என்னத்த செய்றீங்களோ??
ஓமோம்.
முதல்ல இடைவிலகல் எண்டால் என்ன?
‘புறச்சூழற்காரணியாலயோ அல்லது பிள்ளையின் அகச்சூழற்காரணியாலயோ கட்டாயக்கல்வி வயதை நிறைவு செய்யாத பிள்ளையொண்டு பள்ளிக்கூடம் வராமல் நிக்கிறது’ – தான் இடைவிலகல்.
பிள்ளையை திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு வரப்பண்ண முடியும் என்கிறால தான் அதை ‘விலகல்’ என்ற சொல்லால பாவிக்கிறம்.
அந்த நம்பிக்கை இல்லையெண்டால் இடைநிறுத்தம் எண்டு தான் சொல்லிக் கொண்டிருக்க வேணும்.
வடக்கு மாகாணத்தில இன்னமும் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு செய்யப்படாத பிரதேசம் – வலிகாமம்.
வலிகாமம் வடக்கு மட்டுமல்லாமல் அராலி, பொன்னாலை, திருவடிநிலை, சுழிபுரம், காட்டுப்புலம், பாண்டவெட்டை, மாதகல், இளவாலை, கீரிமலை, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி பலாலி, வசாவிளான் எல்லாம் வலிகாமம் தான்..
மீள்குடியேற்றம் என்பது வீடு, மலசலகூடம் கட்டிக்கொடுத்து – வாக்காளர் இடாப்பில் பெயர் பதிந்து – பாடசாலையும், தபால்நிலையமும், கிராமசேவகர் அலுவலகமும் இயங்கினால் மட்டும் போதும் என்று நினைப்பும் செயலும் இருந்தால், இந்த ‘இடைவிலகல்’ எல்லாம் வெறும் ட்ரெய்லர் தான்.
படம் பெரீசா இருக்கும்..கோ!
மீள்குடியேற்றக் கிராமங்களின் சுயபொருளாதார வழிகளை எல்லாம் பூட்டி வைத்துக் கொண்டு, அக்குடும்பங்களின் நிரந்தர வருமானத்தொழிலின் வயிற்றிலடித்துக் கொண்டு, அதே குடும்பத்துப் பதின்ம வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு வா- சோறும் தந்து, பாடமும் படி என்றால் வருவானா?
பிள்ளை பாடசாலைக்கு வராவிட்டால் சமுர்த்திக்காசை வெட்டினால் வருவானா?
• மயிலிட்டித் துறைமுகத்தைப் போல பிரபலமான மீன்பிடித் துறையில், எத்தனை உள்ளூர் படகுக்கு அனுமதி?
• வசாவிளான், மயிலிட்டி, தையிட்டி, ஒட்டப்புலம் என்று பலாலிக்கு காவலாக எத்தனை விவசாய நிலங்களில் கம்பிவேலி ஓடுகிறது?
• பலாலி விமான நிலையத்தில் தினமும் ஏறி இறங்கும் 1008 பிளைட் பூ’வில் – அந்த விமானநிலையத்தால் தொழில் வாய்ப்பு பெறும் பிரதேசவாசிகள் எத்தனை பேர்?
• காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பழைய இரும்புக்கு கழற்றிவித்தது யார்?
• மாதகல் முதல் பொன்னாலை கடந்தும் கடற்தொழிலுக்கு பதிலாக இன்னொரு தொழில் பழக்கியது யார்?
• படிப்பிச்ச அதிபருக்கே கொலை மிரட்டல் விடும் வாள்வெட்டுக் குழுக்களை வளர்த்து ஆதாயம் தேடியது யார்?
• சுடலை வாசலில், பலாலி வடக்குப்பிள்ளைகளின் பள்ளிக்கட்டத்திற்கு காணி தந்த மேன்மக்கள், எங்கே?
• மயிலிட்டி வேதப்பள்ளிக்கூடமும் மாதா கோயில் கிணறும் இரவல் நிலத்தில் தூங்குவது ஏன்?
• காங்கேசன்துறை றோ.க – காணியை தேடினால், தல்செவன’வுக்கு வலிப்பது ஏன்?
• வசாவிளான் வேலுப்பிள்ளைப் பிள்ளைகள் இப்பொழுதும் தகரக்கொட்டிலில் கிடுகு மறைப்பில் படிப்பது ஏன்?
கெளரவ கள்ளரே!
காணி விழுங்கிகளே !
ஆமிக்கும் அரசுக்கும் முதுகுக்குக்கீழ் துடைத்து வாழும் மேன்மக்களே!
ஒரு போகம் பயிர் செய்து – ஒரு குமரை கரை சேர்க்கும் விவசாயம் செய்து வாழ்ந்தவர்களின் மூன்று தலைமுறைகளை ஊரிலிருந்து துரத்தி நிலமற்ற ஏதிலிகளாக்கி –
முகாம் வாழ்க்கையால் ஏறிமிதித்து அவர்களின் பண்பாட்டை, வாழ்க்கைக் கலையை, வாழ்வாதாரத்தை, மண்ணின் மரபுகளை கூத்தை பாட்டை குடும்பஅமைப்பை சிதைத்து சின்னா பின்னாமாக்கியவனும், அதற்கு துணை போன முழு MA.MA.க்களும் இடைவிலகல் பற்றி பேசலாமுங்களாய்யா??
– வாளும் – தூளும் தூக்கியவன், படிக்கத் துணிந்தால் உனக்கு யார் பிரச்சார நோட்டீஸ் ஒட்டுவது?
– எல்லாரும் எண்டர் பண்ணுமளவு படித்தால் யாருக்கு ஒப்பந்தத் தொழிலாளி வேலையும் – அரசியல் நியமனமும் கொடுப்பது?
– மயிலிட்டிப்பிள்ளை சமுத்திரப் பல்கலைக்கழகம் செல்லப் படித்தால், நீர்கொழும்பு படகுகளுக்கு யார் பெமிட் கொடுப்பது?
– மாதகலில் கரை கடக்க பயன்படுத்தும் பொடியள் மறுத்தால் – அவனும் தம்பிகளும் படித்தால், உன் பெருவணிகமும், பினாமிகளும் என்னாவது?
– வசாவிளான் பொடியன் பொறியியல் படித்தால், ஆரை ஆமிக்கன்ரீனுக்கு வேலைக்கு எடுப்பது?
– பலாலி மறுபடியும் பட்டதாரிகளை பிரசவித்தால், யாரை CSDக்கு சேர்ப்பது?
இடைவிலகல் வரும்!
எல்லாப் பிள்ளையையும் முடியாமல் போனாலும், இயன்றளவு தன் வட்டத்திலிருந்து ஆக அத்துமீறாத பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறாமலிருக்கவும் – மீளவும் பள்ளி வளையத்திற்குள் வரவும், தலையாலுழைக்கவும் தயாராகவுள்ளனர், வலிகாமத்தின் ஆசிரியப்பெருமக்களும் அதிபர்களும்.
இது சத்தியம்…
மாவிட்டபுரத்துக்கந்தன் மீதும் இளவாலை வளனார் மீதும் சத்தியம்!!
காடு நுழையப் பயமுள்ளவர்களல்ல நாங்கள், ஏனெனில் எம்முதுகில் புண்ணில்லை?
(தம்பீ, உங்களுக்கு ட்ரான்ஸ்பராம்…
