புதினங்களின் சங்கமம்

யாழில். முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனம் வீதியின் ஓரமாக நின்று , வீதிக்கு ஏற்ற முற்பட்ட வேளை , பின் புறமாக வந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித் மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்