வவுனியா விபத்தில் உடுப்பிட்டி இளைஞன் உயிரிழப்பு !!
சமூக சேவையாளனின் திடீர் இழப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர். அதில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த பேரூந்தின் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவராவார். சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார். அத்துடன் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு குடும்பத்தினரும் உறவுகளும் நண்பர்களும் பேரிழப்பில் இருந்து மீண்டுவர இறைவனை வேண்டுகிறோம்.
#உடுப்பிட்டி #வவுனியா #விபத்து #uduppiddy #accident #sivaruban

